உ.பியில் முலாயம் சிங் யாதவ் 4வது முறையாக முதல்வர் பதவியில் அமர்கிறார். மக்கள் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளதால் கொடுத்த வாக்குறுதியையெல்லாம் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் .

ஆனால் அவர்களது வாக்குறுதிகளை முழுமையாக நிறை வேற்ற ரூ. 66,000 கோடி நிதி தேவைபடுமாம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இதை நிறை வேற்றினால் மாநில மின் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1532 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்படும்.

அதேபோல 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லட் தரபோவதாகவும், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச நீர்ப்பாசன வசதி செய்துதருகவும் சொல்லியுள்ளனர். இதைச் செய்ய ரூ. 1000 கோடிக்குமேல் நிதி தேவைப்படுமாம்.

இதை தவிர விவசாயிகள் வாங்கியிருக்கும் ரூ. 50,000 அளவிலான அனைத்து கடன்களும் தள்ளுபடிசெய்யபடும் என சமாஜ்வாடி அறிவித்திருந்தது. அதைசெய்ய வேண்டுமானால் ரூ. 11,000 கோடி செலவாகும். நிதிதேவைக்கு மத்திய அரசையே நம்ப வேண்டிய நிலையில் சமாஜ்வாடி உள்ளது என்பதால் மத்திய அரசின் கையில் தான் சமாஜ்வாடி ஆட்சியின் வாக்குறுதி உள்ளது என்று சொல்லலாம் .

Tags:

Leave a Reply