சட்டவிரோத சுரங்கம் தொடர்பாக_ முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பாவின் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது. குற்றம் சுமத்துவதற்கு முன்பு

தனது தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை என்ற எடியூரப்பாவின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது.

நீதிமன்றத்தில் நீதி கிடைத்திருக்கின்றது . இதைபோன்று கட்சியிலும் நீதிகிடைக்கும் எனக்குப் பதவி தருவது குறித்து கட்சி தான் முடிவுசெய்ய வேண்டும். நீதிமன்றத்தை போன்று கட்சியிடமிருந்தும் எனக்கு நீதிகிடைக்கும் என நம்புகிறேன் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply