கோவாவில் பாரதிய ஜனதா – மகாராஷ்டிரவாதி_கோமந்த கட்சி கூட்டணி அரசின்_முதல்வராக மனோகர் பாரிக்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக்கொண்டார் .

கோவாவில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாரதிய ஜனதா- மகாராஷ்டிரவாதி கோமந்த கட்சி கூட்டணி பெரும்பான்மையான

இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரசால் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது . பா. ஜனதா 21 எம்எல்ஏ.களுடன் பெரும்பான்மை பெற்றுவிட்டபோதிலும், 3 எம்எல்ஏ.க்களை கொண்ட மகாராஷ்டிரவாதி கோமந்த கட்சியையும் அரசில்_இடம்பெறச் செய்துள்ளது.

முதல் முறையாக ஆளுநர் மாளிகைக்கு பதிலாக திறந்த வெளி மைதானத்தில் பதவியேற்பு_விழா நடந்தது பாரதிய ஜனதா பேரவைகுழு தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட மனோகர் பாரிகர் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்கரி, மற்றும் மூத்த தலைவர்கள் எல்கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ராஜீவ்பிரதாப் ரூடி ஆகியோர் பங்கேற்றனர்.

{qtube vid:=O6lvE6u0-UM}

Leave a Reply