சுப்பிரமணிய சுவாமி யின் ஜனதா கட்சி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி_கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜனதா கட்சியையும் தங்களது கூட்டணியில் இணைத்துகொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் முடிவுசெய்தனர்.

ஜனதா கட்சியின் வரவால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது . ஏற்கெனவே பாரதிய ஜனதா , சிரோன்மணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம்,சிவசேனை, இந்திய குடியரசு கட்சி (ஏ) ஆகியவை கூட்டணியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply