கடுமையான மின்வெட்டில் தமிழகம் தத்தளித்து வருகிறது, உடனடியாக மின் உற்பத்தியை அதிகரிக்க வேறு வழி இல்லை. எனவே, கடைசியாக அரசுக்கு புது திட்டம் ஒன்று உதித்துள்ளது. இத்திட்டப்படி, தமிழகத்தில், வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான, மரபுசாரா எரிசக்தி மின் கொள்கை தயாரிக்க

பட்டுள்ளது. அதில், சூரியமின் சக்தியை கட்டாயமாக்குவதுடன் பல முன்னோடி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இடவசதி கொண்ட அனைத்து வீடுகளிலும், சூரியசக்தி தட்டுகள் வைத்து, மின்சாரம் தயாரித்து, தங்கள் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நட்சத்திர விடுதிகள், அரசின் சார்பிலான தங்கும் விடுதிகள், ஓய்வு இல்லங்கள் போன்றவற்றில், சூரிய சக்தி கட்டமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தங்களது கட்டடத்தின் மேல்தளம் அல்லது வளாகத்தில், சூரியசக்தி கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்.

சூரிய சக்தி கட்டமைப்புகள் அமைக்கும் செலவு, வீடுகளின் மின் பயன்பாடுக்கு ஏற்ப மாறும். உதாரணமாக, 1,000 வாட், அதாவது, 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கட்டமைப்புகளை

அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில்… * 15 வாட்ஸ் திறனில் நான்கு சி.எப்.எல்., பல்புகள்
* 750 வாட்ஸ் இஸ்திரி பெட்டி
* 150 வாட்ஸ் குளிர்பதனப் பெட்டி
* 75 வாட்ஸ் உயர்மட்ட மின் விசிறி அல்லது மேஜை மின் விசிறி
* 100 வாட்ஸ் “டிவி’
* 500 வாட்ஸ் மிக்சி
* 300 வாட்ஸ் கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், 2,000 வாட் அல்லது 2 கிலோ வாட் மின் கட்டமைப்புகள் தேவை. எனவே, மின் விசிறி, விளக்குகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே, சூரிய சக்தி மின் இணைப்பு கொடுக்கப்படும். சூரிய சக்தி தடைபடும் போது, வழக்கமான மின் இணைப்பில் மின்சாரம் எடுத்து கொள்ள வசதி செய்யப்படும்.

இந்த திட்டத்திற்கு, மத்திய அரசின் சார்பில், மொத்த செலவில், 50 சதவீதம் மானியமாக கிடைக்கும். மீதத் தொகையில், தமிழக அரசின் சார்பில் சில சலுகைகள் வழங்குவது குறித்து, ஆலோசனை நடக்கிறது. மேலும், தனியார் வங்கிகள் மற்றும் இந்திய மரபுசாரா எரிசக்தி ஏஜன்சி சார்பில், கடன் வழங்கவும் வசதி செய்யப்படும் என தெரிகிறது.

Tags:

Leave a Reply