பஞ்சாப் முதல்வராக சிரோமணி அகாலிதள கட்சி தலைவர் பிரகாஷ்சிங் பாதல் (85) நேற்று (புதன்கிழமை) பதவியேற்றுகொண்டார். பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது . பஞ்சாப்பின் முதல்வராக 5வது தடவையாக பிரகாஷ்சிங் பாதல் பதவியேற்றுள்ளார்.

பிரகாஷ்சிங் பாதலுடன் அவரது மகன் சுக்வீர்சிங் பாதல் (50) துணை முதல்வராகவும், 16 பேர்_கேபினட் அமைச்சர்களாகவும் பதவியேற்று கொண்டனர். இதில் 12 பேர் சிரோமணி_அகாலி தளத்தையும், 4 பேர் பாஜகா.,வையும் சேர்ந்தவர்கள்.

Leave a Reply