நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) விவசாயம் மற்றும் தொழில் துறைகளின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது. மத்திய திட்ட அமலாக்க துறைக்கான ராஜாங்க அமைச்சர் அஷ்வானி குமார் மக்களவையில் சமர்ப்பித்த தனது பதில் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
பதினாராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண் உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 3.3 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்ட முடியும் என தெரிகிறது. இதே போன்று தொழில்துறையில் 10 முதல் 11 சதவீத வளர்ச்சி காண திட்டமிடப்பட்டது. ஆனால் இத்துறையின் உற்பத்தி 6.7 சதவீதமே வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் .