ஐநா மனித உரிமை_கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரபட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது ; இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிவருகிறது, இலங்கை தமிழர்கள்

குறித்த தமிழக எம்பிக்களின் உணர்வுகளையும் கவலைகளையும் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளும். இலங்கையில் நல்லிணக்கம் உருவாக இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் இறுதிவரைவு அறிக்கை கிடைக்கவில்லை இருப்பினும் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா_வாக்களிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply