பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு இருக்கும் உரிமை கூட எனக்கு இல்லை என்று என்று ரயில்வே அமைச்சர் பதவியை_இழந்துள்ள தினேஷ் திரிவேதி தனது மன குமுறலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ,
பல நூறு உயிர்களை கொன்றுகுவித்த பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் மீதான குற்றசாட்டுகளை மறுக்க அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர வாய்ப்பு தரப்படவில்லை.
எதற்காக ராஜினாமா செய்யசொன்னார்கள் என்பது கடைசிவரை எனக்கு தெரிவிக்கவில்லை. அதை பற்றி நானும் கேட்கவில்லை. மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்ட 10வது நிமிடத்தில் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன் என்று தெரிவித்தார் .