கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர அனுமதிக்க கூடாது என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது : அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்க தக்கது. தமிழகத்தில் கடும் மின்பற்றாகுறை நிலவி வரும் நிலையில் கூடங்குளத்தில்

தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவதை அனுமதிக்ககூடாது.

ஐ.நா. மனிதஉரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான_தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது மகிழ்ச்சியை தருகிறது . தீர்மானத்தை ஆதரித்த தோடு நின்று விடாமல் இலங்கையை போர் குற்றவாளி நாடாக அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சியிலிருந்த கடந்த 5 ஆண்டுகளில் தனிதமிழ் ஈழம் பற்றி பேசாத கருணாநிதி இப்போது தனி ஈழம் தான் பிரச்னைக்கு ஒரேதீர்வு என்கிறார். இலங்கை இறுதி போரின்போது ஈழத்தமிழர்கள் அழிவுக்கு திமுகவும் துணை நின்றது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply