கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கும் ராதாபுரம் தாலுகாவில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது . இந்த உத்தரவை நீக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடிசெய்தனர்.

இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் 144 தடைஉத்தரவு தொடருகிறது.சட்டஒழுங்கை நிலைநாட்ட மாநில அமைச்சரவை தீர்மானம் எடுத்து அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இதை தொடர்ந்து கூடங் குளம் பகுதியில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு பச்சைக்கொடி காட்டபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Tags:

Leave a Reply