இத்தாலியர்கள் கடத்தப்பட்ட நேரத்தில் திடீரென எம்.எல்.ஏ கடத்தப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளிடையேயான அதிகார போட்டிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரிசாவின் உள்மாவட்டங்களான கந்தமால்-கஞ்சம் மாவட்டங்கைல் செயல்படும் மாவோயிஸ்டுகள், ஒரிசா மாநில கமிட்டியின் கீழ்

வருகின்றனர். கஜபதி, நயகடா ஆகிய மாவட்டங்களும் இக்கமிட்டியின் கட்டுப்பாட்டில் உள்ளவை.

ஒரிசா மாநில கமிட்டிதான் 2 இத்தாலியர்களை கடத்தியதாக பொறுப்பேற்றது. அரசுடன் பேச்சுநடத்த தூதர்களையும் நியமித்தது.

இந்நிலையில் இத்தாலியர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜிகா ஹிகா, ஆயுதந்தாங்கிய குழுவினரால் கோரபுட் மாவட்டத்தில் கடத்தப்பட்டனர்.

கோரபுட் மற்றும் ஆந்திர எல்லையோர மல்காங்கிரி மாவட்டங்கள் ஆந்திர மாநில மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இரண்டு தரப்பு தலைவர்களும் மாவோயிஸ்டுகளின் மத்திய குழு அமைப்பின் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுகிறவர்கள் என்று கூறப்படுகிறது.

இருதரப்பும் தங்களது வலுவை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கடத்தல் சம்பவங்களை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply