ஊழலில் ஈடுபடவேண்டாம் என மாணவர்கள் தங்களது பெற்றோர்களை வலியுறுத்தவேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஊழலில் ஈடுபடவேண்டாம் என மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை வலியுறுத்தவேண்டும். வலுவான என்றாவது ஒரு நாள்

லோக்பால் மசோதா நிறைவேறும். அப்போது அனைத்து குற்றவாளிகளும் சிறைக்கு அனுப்பப்படுவர். ஒருநாள் சிறைகள் நிரம்பும்.

அதனால் இந்தவேலையை நாம் ஏன் வீட்டிலிருந்தே தொடங்க கூடாது. உங்கள் பெற்றோர் யாராவது ஊழல்செய்தால் உடனே அதை நிறுத்துமாறு வலியுறுத்துங்கள். அதுதான் இதற்கு தீர்வு என்றார்.

Leave a Reply