இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் பின்பற்றபடுகிறது. தரைப்படையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம் நவீன வகை ஆயுதங்கள் கிடையாது, இரவில் போர்புரிவதர்க்கான திறன் கொஞ்சம்கூட ராணுவத்திடம் இல்லை என்று கூறுவது வேறு யாரும் அல்ல இந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வி.கே. சிங் தான் இதை தெரிவித்துள்ளார்.


உலகிலேயே மிகச்சிறந்த ராணுவம் என பெயர் பெற்றுள்ள இந்திய ராணுவத்துக்கு, மேஜர் வி.கே. சிங் கடிதம் மிகபெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது . இந்த மத்திய அரசு தன்னுடைய "கூட்டணி தர்மத்தையும் & அவர்கள் செய்யும் ஊழலல்களையும் மறைப்பதற்கும் ,காப்பதற்கும் , தொடர்வதர்க்குமே நேரம் போதவில்லை. இந்த லட்சணத்தில் பாதுகாப்பு, நிர்வாகம், திட்டமிடல், போன்ற வேலைகளை எப்படி அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும் …

முந்தய தமிழக அரசின் நிர்வாக திறன் இன்மையால்தான் தற்போது மின் வாரியம், போக்குவரத்து துறை, ஆவின் போன்றவை எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பது கண்கண்ட நிகழ்வு. முந்தைதைய தி மு க வின் 5 ஆண்டுகால ஆட்சி தமிழகத்தை குதறி தள்ளியது என்றல்! அதன் கூட்டாளியான காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சி இந்த பாரதத்தை கொத்திதல்லுகிறது , இதன் வேதனையும் வழியும் இனி வரும் ஆண்டுகளில்தான் தெரியும் என்றாலும் நாம் ஒன்றுபட்டு இந்த பாரதத்தை காப்போம் .

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply