இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் பின்பற்றபடுகிறது. தரைப்படையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம் நவீன வகை ஆயுதங்கள் கிடையாது, இரவில் போர்புரிவதர்க்கான திறன் கொஞ்சம்கூட ராணுவத்திடம் இல்லை என்று கூறுவது வேறு யாரும் அல்ல இந்திய ராணுவ தளபதி· வி.கே. சிங் தான் இதை தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே இவர்· பிறந்தநாள் விவகாரம் , தரம்மற்ற வாகனங்களை வாங்க· லஞ்சம் கொடுக்க முன்வந்தது என வரிசையாக சர்ச்சையில் சிக்கி வருகிறார் , இவரை சர்ச்சையின்· நாயகன் என்று கூறுவதைவிட சர்ச்சையின்· நாயகனாக ஆக்கப்பட்டார் என்பதே உண்மை , பொதுவாக இந்த பாரதத்தில் உண்மையான நேர்மையான தேசபக்த்தனுக்கு கிடைக்கும் பட்டம் என்னவோ இதுவாகத்தான் இருக்கம் ,

அப்படி என்னதான் சர்ச்சை ;டாட்ரா வேட்ரா என்ற நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு தேவையான சுமார் 7,000 வாகனங்களை அதிக விலைக்கு சப்ளை செய்துள்ளது. அந்த வாகனங்களுக்கு ஏற்க்கனவே போதுமான பராமரிப்பும், சர்வீஸ் வசதிகளும் இல்லை. இந்த லட்சணத்தில் இதே நிறுவனம் மேலும் 600 வாகனங்களை சப்ளைசெய்ய முயற்சித்துள்ளது. இந்த வாகனங்களின் தரம் மோசமாக இருக்கவே, இந்த ஆர்டருக்கு இந்திய ராணுவ தளபதி· ஒப்புதல் தரவில்லை.

உடனே இந்தநிறுவனம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி திஜேந்தர்சிங் முலம்· இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங்கிடம்· லாபி செய்து இருக்கிறார்கள், மேலும் இதற்க்கு பிரதிபலனாக 14 கோடி ரூபாய் லஞ்சம் தரவும் முயற்சித்திருக்கிறார்கள். இதை கண்டு மனம் நொந்த· வி.கே. சிங் நமது ராணுவ அமைச்சர் அந்தோணியிடம் இதை தெரிவித்துள்ளார். உடனே நமது ராணுவ· அமைச்சர் என்ன செய்திருக்கவேண்டும் உடனடியாக இதுகுறித்த ரகசிய விசாரனைக்க்காகவாவது உத்தரவிட்டிருக்கலாம் அல்லவா அனால் நமது ராணுவ அமைச்சருக்கோ இது என்ன 14 கோடி நாங்க 1 லட்சத்து· 75 ஆயிரம் கோடியையே பாத்தவங்க என்று தோன்றியதோ ! என்னவோ இதை அவர் சாதரணாம கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

அனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இடைத்தரகர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்தது நிச்சயம் நமது ராணுவ தளபதிக்கு மன உளைச்சலை தந்திருக்கும் , தான் ஒய்வு பெற்ற பிறகு 7,000 வாகனங்களை சப்ளை செய்தவர்களுக்கு 600 வாகனங்களை சப்ளை செய்வதில்· என்ன கஷ்ட்டம் வந்துவிட போகிறது என்று நினைத்திருக்கலாம் எனவே தன்னை பேட்டி எடுக்கவந்த பத்திரிகையாளரிடம் இந்த விவகாரத்தைக் கொட்டித் தீர்த்து விட்டார்.

ஆகா மொத்தத்தில் நமது ராணுவ தளபதி 14 கோடியை வாங்காததுதான் தவறா ? ஒருவேளை அவர் வாங்கியிருந்தால் சர்ச்சையின் நாயகனாக மாறியிருக்க மாட்டார்.

பொதுவாக· · வி.கே. சிங் நேர்மைக்கு பெயர் போனவர், பல நவினத்துவத்தை இந்திய ராணுவத்தில் புகுத்தியவர்· , அரசியல்​ வாதிகளுக்கு மட்டுமின்றி, பல இராணுவ அதிகாரிகளின் ஊழலுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்று பணியாற்றி வருபவர் . இவர் கிழக்குப்பகுதி ஜெனரலாக இருந்த போதுதான் டார்ஜிலிங் அருகே உள்ள சுக்னா ராணுவத்தளம் நில பேர ஊழல்· கிளறப்பட்டது. இதில், தீபக் கபூரும் அவருக்கு முன் பதவியில் இருந்த ஜே.ஜே.சிங்கும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கபூருக்கும் ஜே.ஜே.சிங்குக்கும், வி.கே.சிங் ஒத்துழைக்காமல் போனதின் காரணமாகத்தான் பிறந்த தேதி விவகாரம் கிளறப்பட்டது என்கிறார்கள்

கார்கில் விதவைகளுக்கான ஆதர்ஷ் சொசைட்டி வீடு ஊழல்· விவகார விசாரணையையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, பலரின் முகத்திரையையும் கிழித்தவரும் இந்த வி.கே. சிஙதான்· இங்கும் அவர் நேர்மையாக இருந்ததன் காரணமாகவே சர்ச்சைக்குரியவராக ஆகிவிட்டார்.

மேலும் இவர் என்ன செய்தார் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் ராணுவத்தில் தொழில்நுட்பப் பிரிவு, பீரங்கிப் படை, விமானப் பிரிவு, காலாட் படை மற்றும் சிறப்புப் படை உள்ளிட்டவற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது விமானப் படையில் 97 சதவீதம் பழைய தொழில் நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் வான் எல்லை பாதுகாப்பு மிகவும் பலவினமாக உள்ளது . காலாட் படையின் திறன் சொல்லி கொள்ளும்படி இல்லை. இரவில் போரிடுவதற்கான கருவிகள் ராணுவ வீரர்களிடம் வழங்கப்படவேயில்லை . இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளின் படை பலத்தைக் கணக்கிடும்போது, போர் மூளுமானால் அதை எதிர்கொள்வதற்காவது இந்தியப் படையை தயார் செய்ய வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் கேட்டுகொண்டிருந்தார் , அவர் கேட்டதோ நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று ஆனால் இவர்களால் அவர் எழுதிய கடிதத்தை கூட பாது காக்க முடியவில்லையே !

இந்த மத்திய அரசு தன்னுடைய "கூட்டணி தர்மத்தையும் & அவர்கள் செய்யும் ஊழலல்களையும் மறைப்பதற்கும் ,காப்பதற்கும் , தொடர்வதர்க்குமே நேரம் போதவில்லை. இந்த லட்சணத்தில் பாதுகாப்பு, நிர்வாகம், திட்டமிடல், போன்ற வேலைகளை எப்படி அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும் .

எது எப்படியோ 13 லட்சம் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தந்து தேசத்தை காக்க தயாராகவே இருக்கிறார்கள் ஆனால் நாம் அவர்களுக்கு தரும் ஆயுதம் தரமானதாக இருக்க வேண்டாமா , ஊழல் அரசியல்வாதிகள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் உங்களை பாதுகாக்கும் கருப்பு புனை படை மற்றும் கமாண்டோக்களின் கையில் இருக்கும் ஆயிதம் தரம்மற்றது என்று தீவிரவாதிகளுக்கு தெரிந்தால் உங்கள் நிலை என்ன ஆகும் ?

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Tags; ராணுவ வீரர்கள் ராணுவ வீரர்களை. வீரர்களும் வீரர்களின்  வீரர், ராணுவத்தில் ராணுவத்தினர்

Leave a Reply