புதுக்கோட்டை தொகுதி_சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் சாலைவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இவர் தனது பொலீரோ ஜீப்பில் புதுக்கோட்டையிலிருந்து வி‌ராலிமலை நோக்கிசென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே சொக்க நாதன்பட்டி என்ற இடத்தில் ஜீப்பின் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய ஜீப் உருண்டு , சாலை அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில், சம்பவ இடத்திலேயே எம்எல்ஏ. முத்துக்குமரன் பலியானார்.

Tags:

Leave a Reply