ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற இருந்த ராஜ்யசபா தேர்தலை தேர்தல்கமிஷன் ரத்து செய்தது வரவேற்க தக்கது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார் .

ஜார்க்கண்ட்டில் ராஜ்யசபா தேர்தல்நடந்தது. இதில் சுயேட்சையாக

களமிறங்கிய தொழிலதிபர் ரூ. 2 கோடி_செலவிட்டு எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி தனக்குசாதகமாக ஓட்டுப்போட முயன்றதாக புகார் கிளம்பியது . இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ரூ.2 கோடி பணத்துடன் வாகனம்சிக்கியது. இதைதொடர்ந்து தேர்தலை ரத்துசெய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதுதொடர்பாக தனது பிளாக்கில் அத்வானி கூறுகையி்ல், தேர்தலில் அரசியல்வாதிகளின் பண பலத்திற்கு முற்று புள்ளி வைத்த தேர்தல்கமிஷனை பாராட்டுவதாக தெரிவித்தார். தேர்தலை ரத்துசெய்துள்ள முடிவை வரவேற்பதாகவும் இதுதொடர்பாக கடந்த 2003ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, பணபலமுடைய அரசியல்வாதிகள் போட்டியிட தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. அதன்_மூலம் தற்போது ராஜ்யசபா தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply