ராணுவத்துக்கு தேவையான ஆயுத தளவாடங்கள், கருவிகளை கொள்முதல்செய்வது தொடர்பாக பாதுகாப்புதுறை உயர்நிலை அதிகாரிகளின் அவசர கூட்டம் தில்லியில் மேற்று நடைபெற்றது.

இதில், ஆயுத கொள்முதல் குறித்த நடை முறை முறைப்படுத்தப்படும், ராணுவத் திட்டங்களுக்கு விரைவாக அனுமதிதரப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதியளிதுள்ளார் .

இந்த கூட்டத்தில் ராணுவத் தலைமை தளபதி விகே.சிங், பாதுகாப்புதுறை செயலாளர் சசிகாந்த் சர்மா உள்ளிட்ட மூத்த_அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நவீனக் கருவிகள் மற்றும் ஆயுதம் கொள் முதலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ராணுவ தலைமையகத்துக்கு அதிக நிதிகளை தரவிரும்புவதாக ஏகே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply