நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது; இது குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் “வினோதமான சூழ்நிலை’ நிலவுகிறது என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

பா ஜ க தலைவர்களில் ஒருவரான கிரித் சோமையா எழுதியுள்ள தில்லி மாநில அரசின் ஊழல்கள் பற்றிய

புத்தகத்தை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசிய நிதின் கட்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியது:

ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த ஒரு வாய்ப்பைத் தந்தது. ஆனால், இந்த வாய்ப்பினை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஊழல் மற்றும் தவறான கொள்கைகளால் வாய்ப்பினை நழுவ விட்டது. இன்று நமது நம்பகத்தன்மையே பிரச்னைக்குரியதாகி உள்ளது.

வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு தனியார் விடுதிக்கு உதவியதாக தில்லி மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜ்குமார் செüகான் மீது தில்லி லோக் ஆயுக்த குற்றம்சாட்டியிருந்தது. அவரை நீக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் அது பரிந்துரைத்தது.

ஆனால், கர்நாடக லோக் ஆயுக்தவின் அறிக்கையைக் காட்டி அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை நீக்குமாறு காங்கிரஸ் கோரி வந்தது. பாரதிய ஜனதாவும் எடியூரப்பாவை நீக்கிவிட்டது. ஆனால், ராஜ்குமார் செüகான் மீது எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லையே, ஏன்?

பெருமளவு ஊழல், தவறான கொள்கை – இவற்றால் விலைவாசி உயர்வும் பணவீக்கமும்தான் நாட்டில் பெருகின. இந்நிலையில் சேவை வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது அனைவரையும் கடுமையாக பாதிக்கக்கூடியது.

நாங்கள் தில்லி மாநகராட்சியில் தூய நிர்வாகத்தை தருவோம். எனவே, வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் நிதின் கட்கரி.

முன்னதாக கட்கரி வெளியிட்ட புத்தகத்தில், தில்லி மாநில அரசின் காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மின்துறையை னியார்வசமாக்கியதில் நடந்த மோசடி, மாநகராட்சிப் பேருந்துகள் வாங்கியதில் நடந்த முறைகேடு உள்பட 35 ஊழல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Tags:

Leave a Reply