புதுக்கோட்டை அருகே டிராக்டரின் மீது கார் மோதியதில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆறுபேர் பேர் காயம் அடைந்தனர்.

அறந்தாங்கியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆம்புலன்ஷை பின் தொடர்ந்து அவரது உறவினர்கள் சுமோவில் சென்றனர்.அப்போது எதிரே கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரின் மீது கார் மோதியது.இந்த விபத்தில், அறந்தாங்கியை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆர். நெடுமுடிகிள்ளி மதிவாணன் (55), வளவன் (26), க. விநாயகமூர்த்தி (25) போன்றோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தவிபத்தில் பலியான விநாயகமூர்த்தி அறந்தாங்கி நகர பாரதிய ஜனதா . இளைஞர் அணி துணை தலைவராவார் . இது பற்றி தகவல்லறிந்த பாரதிய ஜனதா மாநில துணை செயலாளர் எச்.ராஜா மற்றும் புதுக்கோட்டை பாஜக.வினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகமூர்த்தி, நெடுமுடி கிள்ளிவளவன், மதிவாணன் ஆகியோரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். பிறகு காயமடைந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply