பஞ்சாப் மாநில ஜெயில்களில் அடைக்ப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைபொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், ஜெயில்வார்டன் மற்றும் போலீசாரின் மூலமாக அவர்களுக்கு போதைமருந்து கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது.

போதைமருந்து கடத்தல் காரர்களுடன் போலீசார் தொடர்பு

வைத்துக்கொண்டு இதை போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போதை மருந்து கடத்தல்காரர்களும், கைதிகளும் ஜெயில் போலீசாரின் செல்போனின் மூலம் தகவல்களை பரிமாறிகொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பஞ்சாப்பில் இருக்கும் அனைத்து சிறைகளிலும் போலீசார் செல்போன் பயன் படுத்த தடைவிதித்து மாநில போலீஸ் டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். செல்போன்க்கு பதிலாக போலீசார் இடையே தகவல்தொடர்புக்கு வயர்லெஸ் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.

Tags:

Leave a Reply