மதுரையில் வரும் 28ம்தேதி நடைபெற இருக்கும் பாரதிய ஜனதா மாநில மாநாடு மற்றும் தாமரை சங்கம பணிகளை மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; மாநாட்டு திடல் ஜனா.கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலும், அரங்கம் சுகுமாறன் நம்பியார்ரின் பெயரிலும் அமைக்கபட்டுள்ளது.

மாநாட்டை முன்னிட்டு 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடபட்டுள்ளது. இந்தமாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்கின்றோம். மாநாட்டு அழைப்பிதழை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியை பாரதிய ஜனதா தொண்டர்கள் செய்துவருகின்றனர் . தமிழகத்திலும், தாயகத்திலும் தாமரை ஆட்சியை மலர செய்வதே இந்தமாநாட்டின் நோக்கம் ஆகும் என்று கூறினார். பேட்டியின்போது மாநில செயலர் மோகனராஜூலு உடன் இருந்தார்.

Leave a Reply