நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மத மாற்றம் செய்ய முயற்சி செய்ததை கண்டித்து பாரதிய ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்போரை ஒரு சபையினர் சந்தித்து மத மாற்றம் செய்ய அணுகினர். இந்த தவகவலை அறிந்த பாரதிய ஜனதாவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ஆனால் மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் காவல் துறை துணையுடன் தப்பி ஓடி விட்டனர். இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டதலைவர் வரதராஜன் உள்ளிட்ட 22 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பரபரப்பும், பதட்டமும் உருவானது .

Leave a Reply