குஜராத் கலவர_வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான புகாருக்கு எவ்வித ஆதாரமுமில்லை என, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு_புலனாய்வு குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக , மாஜிஸ்திரேட் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த, 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு பெரும்கலவரம் ஏற்பட்டது. இதில் முன்னாள் காங்கிரஸ்

எம்.பி. இசான் ஜாப்ரியும் இறந்தார். இந்த கலவரத்தில், நரேந்திர மோடிக்கும் தொடர்பிருப்பதாக கூறி, அவரையும் இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் என்று இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் , குஜராத் கலவர வழக்கினை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட சிறப்பு புலனாய்வு குழு, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்தவழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மாஜிஸ்திரேட் எம்எஸ்.பாட், தனது உத்தரவில் தெரிவித்ததாவது. சிறப்பு புலனாய்வு குழு தாக்கல்செய்துள்ள விசாரணை அறிக்கையில், நரேந்திரமோடி உள்ளிட்ட, புகார் பட்டியலில் இருக்கும் , 58 பேருக்கும், இந்தகலவரத்தில் தொடர்பிருப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply