விருதுநகர் அருகே உள்ள சேதுராஜபுரத்தை சேர்ந்த தபால் அதிகாரி லெட்சுமணன் கொலை வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அஸ்ராகார்க் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் லெட்சுமணனை அவரது மனைவி மாரியம்மாள்,

அருப்புக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

கள்ளத் தொடர்பை கண்டித்ததால் லெட்சுமணனை தீர்த்து கட்டியதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரனிடம் கூறியதாகவும், நான் பார்த்து கொள்கிறேன் என்று அவர் கூறியதாகவும் சாகுல் அமீது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.அருப்புக்கோட்டை-பாளையம்பட்டி ரோட்டில் உள்ள மில்லுக்கு போலீசார் சென்று விசாரித்தபோது அங்கு சாத்தூர் ராமச்சந்திரன் இல்லை. அவரது 2-வது மகன் ரமேசை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை திரும்பிய சாத்தூர் ராமச்சந்திரன் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் விருதுநகர் அருகே ஆவல் சூரம்பட்டியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாமி நாதன் மற்றும் போலீசார் வழிமறித்து அவரை கைது செய்தனர்.

இதையடுத்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் சாத்தூர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.அவர் மீது இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் 120 பி (கூட்டு சதி), 302 (கொலை) 201 (தடயங்களை மறைத்தல்) 506 (1) (சாட்சிகளை மிரட்டுதல்) ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சாத்தூர் ராமச்சந்திரன் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறையில் சாத்தூர் ராமச்சந்திரன் அடைக்கப்பட்டார்.

Tags:

Leave a Reply