மஹாராஷ்டிராவில் பீகார் மாநிலம் உருவான நாளை கொண்டாடுவதற்க்கு மஹாராஸ்டிரா நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதை பற்றி சாட்டை செய்யாத பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மும்பையில் நடை பெறும் பீகார் தின நிகழ்ச்சியில் பங்கேற்க யிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15-ந் தேதி பீகார் மாநிலம் உருவானது , அந்த நாளை பீகார்

தினமாக பீகாரிகள் கொண்டாடி வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஏராளமான பீகாரிகள் வசித்துவருவதால் அங்கும் பீகாரிகள் தினம் கொண்டாடபடுகிறது.

ஆனால் மஹாராஷ்டிராவில் மஹாராஷ்டிர நாள் தான் கொண்டாட பட வேண்டும் என்று தனது பிரித்தலும் ஒட்டு வங்கி அரசியலை ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண்சேனா கையில் எடுத்துள்ளது. ஏற்க்கனவே கடந்த 2008ம் ஆண்டு மஹராஷ்டிராவில் நடைபெற்ற ரயில்வேதேர்வுக்கு வந்த பீகாரிகளை நவ நிர்மாண் சேனா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அந்த அமைப்பு ஒட்டு வங்கி அரசியலை கையில் எடுத்துள்ளது .

இதனிடையே இந்தியாவின் ஒரு பகுதிதான் மும்பை . அங்கு செல்வதற்க்கெல்லாம் விசா எடுக்கதேவையில்லை. என்ன நடந்தாலும் மும்பையில் நடை பெறும் பீகார்தின நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார் .

ஆம் பிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடுவோம் தேச ஒருமை பாட்டை காப்போம் .

Leave a Reply