இலங்கைக்கு அனைத்து கட்சிகுழுவை அனுப்பும் மத்திய அரசின் முடிவில் இருக்கும் முரண்பாடுகள் பெருத்த சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது, இந்த குழுவில் இடம்பெற மாட்டோம்’ என்று , திடீரென அ.தி.மு.க.வும் பின்வாங்கியுள்ளது, மத்திய அரசின் சொதப்பலான செயல்பாடுகளால் இலங்கைக்கு, அனைத்து கட்சி குழுவை அனுப்பும் முடிவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை போருக்கு பின் , நிலவும் அரசியல் சூழ் நிலைகள் மற்றும் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றதா, போரில் பாதிக்கப்பட்டவரின் நிலை எப்படி உள்ளது என்பதை நேரில் அறிந்து வருவதற்காக அனைத்து கட்சி குழுவை அனுப்புவது என மத்திய அரசு அண்மையில் முடிவு எடுத்திருந்தது. அதன்படி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில், 15பேர் கொண்டகுழு செல்ல உள்ளது. முதலாவதாக, இந்தகுழு அமைக்கபட்டதிலேயே பல குழப்பங்கள் ஏற்ப்பட்டுள்ளது

பொதுவாக பாரதிய ஜனதா சார்பில், இலங்கை பிரச்னை குறித்து தெளிவாக புரிந்து வைத்திருப்பவர் வெங்கையா நாயுடு. அதேபோன்று இலங்கை விவகாரங்களுக்கு பாரதிய ஜனதா வில் பொறுப்பு வகிப்பவர் யஷ்வந்த் சின்கா.ஆனால் இவர்களுக்கு இடம் தராமல் பல்பீர்புஞ்ச் என்ற எம்.பி., செல்லவுள்ளார். மேலும் இலங்கை பிரச்னைகளை கையிலெடுத்து, தீவிரமாக குரல் எழுப்பும், தமிழக எம்பி.,க்களில் லோக்சபாவில் கணேசமூர்த்தியும் மற்றும் ராஜ்ய சபாவில் ராஜா போன்றவர்கள்தான். ஆனால் இவர்கள் குழுவில் இடம்பெறவில்லை.இலங்கை விவகாரத்தில் பொதுவாக வட மாநிலங்களை சேர்ந்த கட்சிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை . ஆனால், அவர்களுக்கு எல்லாம் கூட வாய்ப்பு தரப்பட்டுள்ளது

முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை சந்திப்பதோ, சிங்கள குடியேற்றம் பற்றியோ, தமிழர் பகுதிகளில் நடக்கும் திடீர்தாக்குதல்கள் பற்றியோ, அரசியல் தீர்வு காண்பது பற்றியோ, இந்த குழுவின் பயணத் திட்டத்தில் எதுவுமில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு சங்கடம் தரும் , எந்த ஒரு விஷயமும் இல்லாத வகையிலேயே பயணதிட்டம் தயாராகியுள்ளது. ஆகா மொத்தத்தில் இலங்கை அரசியல் வாதிகளை பார்த்து நலம் விசாரிப்பதற்கே இந்த காங்கிரஸ் அரசாங்கம் அனைத்து கட்சி குழுவை அனுப்புகிறதோ என்னவோ ?

Leave a Reply