மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையை தகர்த்து மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார். புதிய ஆட்சியில் அவரிடம் மக்கள் நிறையவே எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு நடப்பதோ வேறு அவரது நடவடிக்கைகள் எதிர்மறைவு விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ரெயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக ரெயில் மந்திரி பதவியில் இருந்து தினேஷ் திரிவேதியை நீக்க நெருக்கடி கொடுத்தார். இது அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தான் நீக்கப்பட்டது தொடர்பாக திரிவேதி உருக்கமான கருத்துகளை வெளியிட்டார். இது படித்தவர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது .ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பில் மம்தா செல்வாக்கு சரிந்துள்ளது என்று 87 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். சமீபத்திய நடவடிகைகளால் மம்தாவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். மம்தாவுக்கு ஆதரவாக 11 சதவீதம் பேரே வாக்களித்துள்ளனர்.மம்தா பானர்ஜி தொடர்ந்து செல்வாக்குடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 2 சத தம் பேர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Tags:

Leave a Reply