தனி தெலங்கானாவை வலியுறுத்தி யாத்திரை மேற் கொள்ள பாரதிய ஜனதா இளைஞரணி முடிவுசெய்துள்ளது.

இந்த யாத்திரைக்கு “தெலங்கானா உறுதி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தயாத்திரை 11 நாள்கள் நடை பெறுகிறது . ஹைதராபாத், நிஜாமாபாத்,

மேடக்,அடிலாபாத், கரீம் நகர், கம்மம், நல்கொண்டா, வாரங்கல் போன்ற மாவட்டங்களின் வழியாக யாத்திரை நடை பெறுகிறது.

பொதுவாக இளைஞர்களிடையே தெலங்கானா தனிமாநிலம் குறித்து நம்பிக்கையை உருவாக்கவும் , தெலங்கானா அமையவேண்டும் என்பதில் மக்கள் எந்தஅளவுக்கு உறுதியாக உள்ளார்கள் என்பதை வெளிக்காட்டவுமே இந்தயாத்திரை. என்று மாநில பாஜக இளைஞரணி தலைவர் வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார் .

Leave a Reply