தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை பார்வையிட இந்தியாவிலிருந்து, சுஷ்மா சுவராஜ்ஜின் தலைமையில் அனைத்து கட்சி எம்பி.க்கள் குழு ஆறு நாள் பயணமாக டெல்லியிலிருந்து இலங்கை புறப்பட்டுசென்றது.

தமிழர்களின் மறு வாழ்வு பணிகளை பார்வையிட இந்தியாவிலிருந்து அனைத்து கட்சி எம்பி.க்கள் குழுவை மத்திய அரசு இலங்கை அனுப்பியது.

இந்த குழு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜின் தலைமையில் இலங்கை செல்கிறது , முதலில் இந்த குழுவில் 14 எம்பி.க்கள் இடம்பெற்றனர். இவர்களில் ஏழு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

ஆனால் தி.மு.க.,அ.தி.மு.க., திரிணாமூல் போன்ற கட்சிகளின் எம்பி.க்கள் விலகியதால் , தற்போது 11 எம்பி.க்கள் மட்டுமே இலங்கைக்கு சென்றுள்ளனர்.

Tags:

Leave a Reply