இலங்கை சென்றுள்ள இந்திய எம்பிக்கள் குழுவில் தி.மு.க இடம் பெறாது என அறிவித்தது கடமை தவறியசெயல் என் பா.ஜ.க தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாடியுள்ளார் .

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;
எம்.பி.க்கள் குழுவில் திமுக. இடம்பெறாதது கடமை தவறிய

செயலாகும். இலங்கை செல்லும்முன்பாக சுஸ்மா ஸ்வராஜை நேரில்_சந்தித்து இலங்கை தமிழர்களுக்கு என்ன என்ன தேவை என்பது தொடர்பாக விவரமாக விளக்கியிருக்கிறேன்.

முள் வேலி முகாம்களில் அடைக்கபட்ட தமிழர்களுக்கு 50000 வீடுகள் கட்டிதரப்படும் என்று இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி வீடுகள் கட்டிக்கொடுக்க படவில்லை.

இதேபோன்று இலங்கை தமிழர் புனர் வாழ்வுக்காக மத்திய_அரசு ரூ500கோடி வழங்கியது. அந்தபணம் முறையாக தமிழர்களுக்காகத் தான் செலவிடப்பட்டதா என்பது தொடர்பாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சுஸ்மாவிடம் கேட்டு கொண்டேன் என்று தெரிவித்தார் .

Leave a Reply