மக்களிடையே காங்கிரஸ்க்கு எதிரான உணர்வு இருப்பதை தில்லி மாநகராட்சிதேர்தல் முடிவு உறுதிப்படுத்துவதாக பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். வயதாகி விட்ட காங்கிரஸ்க்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.

ஆளும் அரசின் திறமையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட அம்சங்கள் தான்

காங்கிரஸுக்கு தோல்வியை ஏற்படுத்தியது.அடுத்து சட்டப் பேரவை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று கட்கரி உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply