ராணுவ வாகனங்கள் வாங்குவதற்கு தனக்கு ரூ.14கோடி லஞ்சம் தரமுயன்றதாக ராணுவ தளபதி விகே.சிங் தனது புகரில் தெரிவித்திருந்தார் . இந்தவிவகாரம் தொடர்பாக சிபிஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் ராணுவ வாகனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்தொடர்பாக சிபிஐ. இன்று டெல்லி , நொய்டாவில் உள்ளிட்ட

மூன்று இடங்களில் அதிரடிசோதனை நடத்தியது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீடுகளில் சிபிஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் .

இதே போன்று வெக்ட்ரா_நிறுவன அதிகாரி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தசோதனையின் போது ராணுவ வாகனங்கள் ஒப்பந்தம்தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக சிபிஐ. வட்டாரங்கள் தெரிவிகின்றன .

Leave a Reply