நடப்பு ஏப்ரல் மாதம் துவங்கியுள்ள ரபி சந்தைப்படுத்துதல் பருவத்தில் இதுவரை கோதுமை கொள்முதல் முந்தை ஆண்டின் இதே கால அளவான 28 லட்சம் டன்னை காட்டிலும் 15.2 சதவீதம் அதிகரித்து 32.95 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

முந்தைய பருவத்தில் 2 லட்சம் டன் கோதுமை கொள்முதல்

செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்திலிருந்து நடப்பு காலத்தில் கொள்முதல் 28,000 டன் குறைந்து போயுள்ளது. அதே போல், ஹரியானா மாநிலத்தில் கொள் முதல் முந்தைய பருவ அளவான 12.18 லட்சம் டன்னிலிருந்து 42 சதவீதம் குறைந்து 6.98 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

மாறாக, குஜராத் மாநிலத்தில் கொள்முதல் மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்து 33,155 டன்னாகவும், மத்திய பிரதேச மாநிலத்தில் 70 சதவீதம் அதிகரித்து 24.07 லட்சம் டன்னாகவும், அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 32,000 டன், ராஜஸ்தானில் 91,000 டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் பாஜக ஆளும் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply