குறிப்பிட்ட சில செய்திதொலைக்காட்சிகளை பார்க்காமல் இசை நிகழ்ச்சிகளை தரும் தொலை காட்சிகளை மட்டும் பார்த்து சந்தோஷமாக இருக்குமாறு மேங்கு வங்க மக்ககளை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது , மார்க்சிஸ்ட் கட்சியினருடைய 2, 3 தொலை காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக பார்க்கக் கூடாது. அதற்கு

பதில் இசைநிகழ்ச்சிகளை வழங்கும் தொலை காட்சிகளை கண்டு களியுங்கள் . ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக செய்திகளை வெளியிடுவ தாகவும், தவறான கருத்துகளை பரப்பி வருவதாகவும் மமதா தெரிவித்தார்.

நாட்டு நடப்பை அறிந்து கேள்வி கேட்பது மக்களின் கடமை , செய்தி தொலை காட்சிகளை பார்க்காமல் இசை நிகழ்ச்சிகளை பாருங்கள் என்று கூறுவது மக்களை அறியாமைக்கு இட்டு செல்லும் வழியாகும், மடியில் கணம் இல்லை என்றால் நீங்கள் பயப்புடுவது ஏனோ , நெருப்பில்லாமல் புகையாது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்

Tags:

Leave a Reply