பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்காரி, நரேந்திர மோடி இடையே கருத்து வேறுபாடு எழுந்திருப்பதாக கூறுவது பொய்யானதகவல் என பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் கருத்து தெரிவித்துள்ளார்

5ந்து மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா.சார்பில் பிரசாரம்செய்ய

மோடி வரவில்லை. தனது சொந்தமாநில பிரச்னை , சட்ட மன்ற பட்ஜெட் கூட்ட தொடர் போன்றவை காரணமாக கூறப்பட்டன. இதை வைத்து கட்காரி மற்றும் மோடி, இடையே கருத்துவேறுபாடு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில், கட்காரி மற்றும் மோடி இடையே அப்படி ஒன்றும் கருத்து வேறுபாடு இல்லை. இதனை கட்காரியே தெரிவித்துள்ளார் . அதற்குமேல் ஒன்று கூறு வதற்கில்லை. பாரதிய ஜனதாவில் எப்போதும் போல தலைவர்களிடையே சுமூகமான உறவு உள்ளது. ஒரு சில ஊடகங்கள்தான் வேண்டு மென்றே கதை கட்டி விடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply