இந்தியாவிலேயே சூரிய சக்தியிலிருந்து அதிகமாக மின்சாரத்தை உற்பத்திசெய்யும் முதல் மாநிலம் என்ற பெயரை குஜராத் பெறுகிறது .

எனவே 18 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களுக்கு 24 மணிநேர தடையற்ற மின்சேவையை வழங்கி வருகிறது நரியன்ற மோடி

தலைமையிலான குஜராத் மாநில அரசு. கோடை காலத்தில் நாடு முழுவதும் மின்சாரத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் குஜராத்திலோ சூழ்நிலை வேறுமாதிரியாக உள்ளது.

“சிலகாலத்துக்கு முன்புவரை மின்சாரம் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக இருந்த குஜராத்தின் தற்போதைய நிலை மாறிவிட்டது’ 24 மணிநேர தடையற்ற தரமான மின்சேவை கிராமவாசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது , ஜோதி கிராம திட்டம் கிராமப் புற பொருளா தாரத்தை மேம்படுத்திவருகிறது.

“மாநிலத்தில் மின்பற்றா குறை ஏற்படாமல் இருக்க நிர்வாகம் முடக்கம் என்பது இல்லாததே முக்கிய காரணமாகும். எங்களது ஒவ்வொரு திட்டங்களும் திட்டமிட்ட படியே உரிய காலத்தில் நிறைவேற்ற பட்டன’ என குஜராத் மின் துறையின் வெற்றி குறித்து கருத்துதெரிவித்தார் மாநில மின்துறை அமைச்சர் சொரப் பட்டேல்.

Tags:

Leave a Reply