மிககடுமையான வெயிலால் கால்வாய் நீர் ஆவியாகி வீணாவதை தடுக்கவும், அதேநேரத்தில் சூரிய ஒளியை பயன் படுத்தி மின்சாரம் தயாரிக்கவும், மிக நூதன திட்டத்தை நரேந்த்ர மோடி தலைமையிலான குஜராத் அரசு அமல்படுத்தி உள்ளது. நர்மதா நதி கால்வாயில், குஜராத் அரசு நிறுவியுள்ள இத்திட்டம் மூலம் மின்சாரம் கிடைபதுடன், தண்ணீர் ஆவியாவதும் தடுக்கப்படும்.

குஜராத் மாநில மின்வாரியம் தொடங்கியுள்ள இத் திட்டம், நர்மதா கால்வாயில் 750 மீ நீளத்தில் நிறுவபட்டுள்ளது. இதன் மூலம், வருடத்துக்கு 16 லட்சம்யூனிட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். இதன் மூலம் இந்தகால்வாயில் இருந்து ஆண்டுக்கு 90 லட்ச லிட்டர் தண்ணீர் ஆவியாவது தடுக்கபடும். இந்த கால்வாய் 19 ஆயிரம் கி.மீ., நீளமுள்ளது, இதில் 10 சதவீதத்தில் மட்டும் சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்கினால் , 2,200 மெகா வாட் சூரிய சக்தி மின் உற்பத்தித்திறனை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் வருடத்துக்கு 2000 கோடி_லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

{qtube vid:=DZvjOnNzFD0}

Leave a Reply