மதுரை ஆதீனமாக பொறுப்பை ஏற்ப்பதற்கு முதலில் நான் தயங்கினேன். இருப்பினும் எதுவந்தாலும் எதிர் கொள்‌வோம் என்று எனக்கு ‌தைரியம்மூட்டினார் மதுரை ஆதீனம் என்று நித்தியானந்தா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நித்தியானந்தா மேலும் தெரிவித்ததாவது; மதுரை ஆதீன தலைமை பொறுப்‌பை ஏற்ப்பதற்கு முதலில் நான் தயங்கினேன். இருப்பினும் எதுவந்தாலும் சந்திக்க தயாராக இருக்க‌ேவேண்டும் என்று மதுரை ஆதீனம் எனக்கு தைரிய மூட்டினார். அதன் பிறகே நான் தலைமைபொறுப்பை ஏற்றேன். மதுரை ஆதீன மடத்தை நிர்வகிப்பதற்கு 50 பேரை பெங்களுரூ பிடதியி லிருந்து அனுப்பி வைக்க முடிவுசெய்துள்ளதாகவும், மதுரையில் 100 கிராமங்கள் பயன் பெறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்க உள்ளதாகவும் நித்யானந்தா தெரிவித்தார்.

Leave a Reply