மதுரை பாரதிய ஜனதா மாநில மாநாட்டில் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை , மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்” என்று , அதன் அகில இந்திய இணை அமைப்பு செயலர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.

மாநாட்டு திடலில் நடைபெற்ற , மாவட்ட மையக்குழு கூட்டத்தில், சதீஷ் பேசியதாவது: மதுரையில், மே 10, 11ல் நடைபெறும்

மாநாடு, கொள்கைவிளக்க மாநாடாக அமையும். தலைவர்கள் தெரிவிக்கும் செய்திகளை , மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அதன் மூலம், மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

மதுரை தாமரை சங்கமம் குறித்து, பொதுச் செயலர்கள் மோகன் ராஜுலு, சரவணப் பெருமாள் விளக்கினர். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், கே.என்.லட்சுமணன், துணைத் தலைவர் எச்.ராஜா, மாநில செயலர்கள் வானதி சீனிவாசன், சுரேந்திரன், மாநில செயலாளர் திரு. கருப்பு (எ) முருகானந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர்,

Tags:

Leave a Reply