பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர் ராவ் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மதுரை தாமரை சங்கமம் என்ற பா ஜ க வின் 5-வது மாநில மாநாடு மழை காரணமாக தள்ளி வைக்கபட்டது. எந்ததேதியில் மாநாடு

நடத்துவது என்பது குறித்து மாநில மற்றும் தேசிய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு மாநாட்டு மறு தேதி முடிவு செய்யபட்டது.

அதன் படி அடுத்த மாதம் (மே 10,11) ஆகிய இரண்டு நாட்கள் திட்டமிட்டபடி மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் மாநாடு நடத்தபடும். இந்தமாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர் எல்கே.அத்வானி, தலைவர் நிதின்கட்காரி, பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பாஜக முதல் மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மீனவர்கள், விவசாயிகள், இலங்கை தமிழர்கள் பிரச்சினை போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்சினைக்கு பா,ஜனதா மாநாட்டில் தீர்வுகாண தீர்மானங்கள் நிறைவேற்ற ப்படும். மதுரை மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்தார்.

Tags:

Leave a Reply