மதுரையில் வரும் மே 10, 11ம் தேதிகளில் பாரதிய ஜனதா தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கும் தாமரை சங்கமம் நிகழ்ச்சி நடை பெற உள்ளதை முன்னிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாஜ்சும் வகையில் தீவிரவாத அமைப்பினர் நடத்திய குண்டு வெடிப்பு இது என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மதுரை அண்ணா நகரில் இருக்கும் ராமர் கோயில் அருகே நிறுத்தபட்டிருந்த சைக்கிளில் சிறிய ரக வெடி குண்டு வெடித்து சிதறியது. இதைதொடர்ந்து அந்த பகுதியில் தீவிர விசாரணையை மேற் கொண்ட காவல் துறையினர், பாரதிய ஜனதாவின் மாநாட்டை சீர்குலைக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலமோ .என சந்தேகிக்கின்றனர் ,இதை தொடர்ந்து மதுரையில் பாஜக மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply