திருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக தேடப்பட்டுவந்த தமிழக காவல் துறை ஐ.ஜி. பிரமோத் குமார், தில்லி அருகே குர்காவ்னில் சி.பி.ஐ அதிகாரிகளால் புதன் கிழமை கைதுசெய்யப்பட்டார்.

சிபிஐ அதிகாரிகள் அவரை புதன்கிழமை இரவே கோவை

கொண்டுசென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் தன்னை சிபிஐ கைதுசெய்யாமல் இருக்க பிரமோத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை ஏப்ரல் 20ம் தேதி நீதி மன்றம் தள்ளுபடிசெய்தது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply