ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுபெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யபடவில்லை. அது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களுடன் , ஆலோசித்த பிறகே முடிவுசெய்யப்படும்’ என்று , பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு முன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் தனியாகவும், பிறகு கூட்டாகவும் கலந்தாலோசிக்கப்படும். மாநில கட்சிகளுடனும்
இது குறித்து ஆலோசிக்கப்படும்.

லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் குறிப்பிட்டது, ஜனாதிபதி பதவிக்கு அப்துல்கலாம் தகுதியானவர் என்பதுமட்டுமே. ஆனால், அதற்காக அவரை தான் பாரதிய ஜனதா, வேட்பாளராக தேர்வுசெய்துள்ளது என்பது பொருளல்ல என்று நிதின் கட்காரி கருத்து தெரிவித்தார்.

Leave a Reply