மதுரையில் பாரதிய ஜனதா மாநில மாநாட்டின்போது கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வாறு பந்தல் அமைக்கபடுகிறது,” என்று , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மழையினால் தள்ளிவைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு, மதுரையில் மே 10, 11ல் நடைபெறுகிறது,

அதற்கான பணிகள் தீவிரமாக_நடக்கின்றன. மழைதொடர்வதால் தண்ணீர் வெளியேறுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யபடுகின்றன.

மாநாடு பந்தலைசுற்றி கால்வாய் அமைக்கபட்டுள்ளது. பந்தல் முழு வதும் கிரஷர் மண் அடிக்கபடுகிறது இந்த பணிகளை மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது , “”மழைபெய்தாலும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் . மழை பெய்தால், தண்ணீர் பந்தலுகுள் வராத வாறு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றபடும். வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் தகுந்தவசதிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை மே 6க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. மூத்த தலைவர் அத்வானி உட்பட அனைவரும் பங் கேற்கின்றனர் என்றார் ,” அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, பொது செயலாளர் சரவணப்பெருமாள், மாநில செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் அவர் அருகில் இருந்தனர் .

Leave a Reply