தனிதெலங்கானா உருவாக்கி தருவதாக தந்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கிய தன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு காங்கிரஸ்கட்சி துரோகம் இழைத்து_விட்டதாக பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .

“”தெலங்கானாவும் ராயலசீமாவும் தனி தனியாக வளமாகவும்

அமைதியாகவும் இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் அரசு தீர்மானம் கொண்டு வந்தால், அதை நிறை வேற்றுவோம்” என மாநிலங்களவையில் வெள்ளிக் கிழமை பேசிய பாரதிய ஜனதா உறுப்பினர் பிரகாஷ்_ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்

.தனிதெலங்கானா உருவாக்குவது தொடர்பான தனி நபர் தீர்மானத்தை அப்போது அவர் கொண்டு வந்தார். தெலங்கானா உருவாக்குவோம் என தனது குறைந்த பட்ச பொதுசெயல் திட்டத்தில் காங்கிரஸ் உறுதியளித்ததை சுட்டிக் காட்டிய ஜவடேகர், “”தெலங்கானாவை உருவாக்கும்_பணி தொடங்கி விட்டது என 2009 ஆண்டிலேயே உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார் . ஆனால், இரண்டரை ஆண்டாகியும் எதுவும் நடக்கவில்லை” என தெரிவித்தார் .

Leave a Reply