மதுரையில் நாளை (மே 10) நடைபெறும் பாரதிய ஜனதாவின் 5வது மாநில மாநாட்டுக்கான (தாமரை சங்கமம் ) ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது . இந்த தாமரை சங்கமத்துக்காக இரண்டு அடுக்கு தாமரைவடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது .

மாநாட்டு நிகழ்சிகள் 11 இடங்களில் எ.ல்.இடி திரையில்

ஒளிபரப்பபடுகிறது. அரங்கின் உள்பகுதியில் எட்டு இடங்களிலும், அரங்கின் வெளியே மூன்று இடங்களிலும் எல்.இ.டி திரையில் ஒளிபரப்புசெய்யப்படும். மதுரை விரகனூர் பகுதியில் 37 ஏக்கரில் இருக்கும் மாநாட்டுவளாகத்தில், இரண்டரை லட்ச சதுர அடியில் மாநாட்டுப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . மாநாட்டு அரங்குக்கு மூன்று நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்கின் முகப்பில் பதிவுசெய்வதற்கு 100 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இங்கு பத்து ருபாய் நுழைவு கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு மற்றும் உணவு கூப்பனை பெற்றுக்கொள்ளலாம்.

Tags:

Leave a Reply