நித்யானந்தாவால் உலகில் இருக்கும் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர், அவர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்துமதத்தை நல்ல முறையில் பரப்பி வருகிறார். என அகிலபாரத இந்து மகா சபா தெரிவித்துள்ளது .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; நித்யானந்தர்

இந்தியா மட்டு மின்றி, உலகம்மெங்கும் இந்துமதத்தை நல்ல முறையில் பரப்பிவருகிறார். இந்து மதம் தழைத் தோங்க பல முயற்சிகளும் எடுத்து வருகிறார். அவரது தொண்டு தொடர எங்கள் அமைப்பு முழுஆதரவு கொடுக்கிறது.அவர் நீடூழி வாழ்ந்து இந்துமதத்திற்கு இன்னமும் பலசாதனைகள் புரியவேண்டும்.

இந்து மதத்தை பொறுத்த வரை யாராவது ஒருவர் நல்லகாரியம் செய்தால் சிலர் எதிர்ப்பது வாடிக்கை தான்.அது போல நித்யானந்தரின் தொண்டுகளை பொறுக்கமுடியாத சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் இந்து மதவிரோதிகள்.

நித்யானந்தர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தாலும் அவை யெல்லாம் சிறுசிறு பிரச்னைகள் தான்.அவருக்கு இருக்கும் சக்தியில் இதெல்லாம் சாதாரணவிஷயம்.இந்த பிரச்னைகளில் இருந்து அவர் எளிதில் மீண்டு வருவார்”என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply