மதுரை பாரதிய ஜனதாவின் 5வது மாநில மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று பாஜகவின் அகில இந்திய செயலர் முரளிதர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : மதுரை 5வது

மாநிலமாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படும். தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு இந்தமாநாடு மைல் கல்லாக அமையும். மேலும் தமிழகத்தின்_கோரிக்கைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாகவும் இந்தமாநாடு அமையும்.

அதன் அடிப்படையில்தான் மாநாட்டு தீர்மானங்கள் தயாரிக்கபட்டுள்ளன. இந்தமாநாட்டில் அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மாசுவராஜ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று முரளிதரராவ் தெரிவித்தார்.

Leave a Reply