விரைவில் மத்தியில் தாமரை ஆட்சி மலரும் என்று மதுரையில் நடைபெற்றும் பாரதிய ஜனதாவின் 5வது மாநில மாநாட்டை தொடங்கிவைத்து வைத்து பேசிய பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது ; காங்கிரசிற்கு கெட்டகாலம் தொடங்கி விட்டது; தற்போது நாடுமுழுவதிலும் பாரதிய

ஜனதா 126 எம்பி.,களையும், 900 எம்எல்ஏ.,க்களையும் கொண்டுள்ளது; இதேபோன்று தமிழகத்திலும் எம்.பி.‌, மற்றும் எம்.எல்.ஏ.,க்களை உருவாக்க பாரதிய ஜனதாவின் , முயற்சி செய்து வருகிறது;

தற்போதைய காங்கிரஸ் அரசால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்; விளை பொருட்கள் பெருமளவில் வீணடிக்கபடுகின்றன; எனவே விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரூநாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் சரிந்து வருகிறது; இந்தியாவில் செய்யபடும் முதலீடுகளும் களவாடப் படுகின்றன; எனவே தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருகிறது; மத்திய அரசின் தவறானகொள்கையால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது;

வாஜ்பாய் கொண்டுவந்த காவிரி கூட்டு குடி நீர் திட்டம் போன்ற நல திட்ட பணிகளையும் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டுவிட்டது; இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் மத்திய_அரசு நடவடிக்கை எடு்க்கவில்லை.

நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது; இனி இந்தநிலை மாறபோகிறது, குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு போன்றவை முடிவுக்கு வரும் காலம் வந்துவிட்டது; நாட்டின் இந்த துயரநிலையை மாற்ற விரைவில் தாமரை ஆட்சி மலரும் என்று கட்காரி தெரிவித்தார்.

முன்னதாக மாநாட்டில் பாரதிய ஜனதாவின்  முன்னாள் மாநில பொருளாளர் சங்கர் எழுதிய “தாமரையாய் மலர்ந்த அகல் விளக்கு” என்ற நூலை_கட்சியின் மூத்த தலைவர் நிதின்கட்காரி வெளியிட முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் பெற்றுக்கொண்டார்.மாநாட்டில், நிதின் கட்காரி, கட்சியின் ஆரம்பகால நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Tags:

Leave a Reply